தேசிய செய்திகள்

வீட்டில் இருந்து தவழ்ந்து ரோட்டுக்கு வந்த கைக்குழந்தை; பஸ் டிரைவரின் சாமர்த்தியத்தால் உயிர்தப்பியது

குழந்தையின் வீடு பிரதான சாலையை ஒட்டியபடி இருக்கிறது.

திருவனந்தபுரம்,

கேரளம் மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கொண்டோட்டி நகரில் இருந்து வலியபரம்பா செருமுட்டம் செல்லும் சாலையில் தனியார் பஸ் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. புதியேடத்துப்பரம்பா - ந்தபஸ்சை ராமச்சந்திரன் என்பவர் ஓட்டி வந்தார்.

சிறியமுற்றம் என்ற இடத்தில் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையின் நடுவே கைக்குழந்தை ஒன்று ஒய்யாரமாக அமர்ந்து கொண்டிருந்தது.அதனை பார்த்த டிரைவர் ராமச்சந்திரன் சாமர்த்தியமாக பிரேக் போட்டு பஸ்சை நடுரோட்டில் நிறுத்தினார். புன்பு அந்த பஸ்சின் கண்டக்டர் நவாஸ் ஓடி சென்று குழந்தையை கையில் எடுத்து சாலையோரமாக தூக்கிசென்றார்.

அந்த குழந்தை யாருடையது? என்று விசாரித்தபோது அந்த பகுதியில் இருந்து ஒரு வீட்டில் இருந்து இருவர் வீட்டு வரண்டாவில் இருந்த தங்களது குழந்தையை காணவில்லை என்று கூறி பதறியடித்தப்படி ஓடிவந்தனர்.

அவர்கள் பஸ் கண்டக்டரிடம் தங்களின் குழந்தை என்று கூறினர்.தங்களின் குழந்தையை வாரியணைத்து வாங்கிக்கொண்டு கொஞ்சினர். குழந்தையின் வீடு பிரதான சாலையை ஒட்டியபடி இருக்கிறது.

குழந்தையின் பெற்றோர் வீட்டின் வராண்டாவில் அமர்ந்திருந்தனர். அப்போது அந்த குழந்தை தவழ்ந்தபடியே சாலைக்கு சென்றுவிட்டது. அதனை குழந்தையின் பெற்றோர் அதனை கவனிக்கவில்லை.இந்தநிலையில் தான் தனியார் பஸ் டிரைவர் குழந்தையை கவனித்து மீட்டுள்ளார்.தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரின் சமயோகித செயலால் அந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.