தேசிய செய்திகள்

உடைந்த காலுக்கு அட்டை பெட்டியால் கட்டு... நோயாளிக்கு இப்படியும் சிகிச்சையா?

உடைந்த காலுடன் அனுமதிக்கப்பட்ட நபருக்கு டாக்டர்கள் அட்டை பெட்டியை கொண்டு கட்டுப் போட்டுள்ளனர்.

பீகார்,

பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சாலை விபத்தில் சிக்கிய நோயாளி ஒருவர் உடைந்த காலுடன் அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்குள்ள டாக்டர்கள் அவருக்கு அட்டை பெட்டியை கொண்டு கட்டுப் போட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையடுத்து ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் சம்பவத்தின்போது ஆஸ்பத்திரியில் எலும்பு முறிவு டாக்டர் பணியில் இல்லை என்றும், இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மாநிலத்தின் அவலமான சுகாதாரத்துறையை கண்டிக்கும் வகையில் இந்த சம்பவம் நெட்டிசன்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவசர சிகிச்சைக்கு கூட முறையான மருத்துவ உபகரணங்கள் இன்றி, அட்டை பெட்டிகளை பயன்படுத்திய அவலம் வலைதளத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.