தேசிய செய்திகள்

பக்கத்து வீட்டு ஆண் பூனையால் கர்ப்பம்: பெண் பூனை 4 குட்டிகளை ஈன்றதால் இரு குடும்பத்தினர் இடையே தகராறு

பெண் பூனை ஈன்ற 4 குட்டிகளுக்காக இரு குடும்பத்தினர் மோதிக்கொண்ட விசித்திர சம்பவம் பேசு பொருளாகியுள்ளது.

பெங்களூரு

கர்நாடகா மாநிலம் பெங்களூரு சேஷாத்திரிபுரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களது வீட்டில் ஒரு பெண் பூனையை வளர்த்து வருகின்ற னர். இவர்களது பக்கத்து வீட்டில் மற்றொரு குடும்பத்தினர் வசிக்கிறார்கள். அவர்கள் தங்க ளது வீட்டில் ஒரு ஆண் பூனையை வளர்த்து வருகிறார்கள். இதற்கிடையில், பெண் பூனை கர்ப்பம் அடைந்தது.

மேலும் அந்த பூனை 4 குட்டிகளையும் ஈன்றது. இந்த நிலையில், தங்களது பெண் பூனை கர்ப்பம் அடைந்து 4 குட்டிகளை ஈன்றதற்கு பக்கத்து வீட்டினரின் ஆண் பூனை தான் கார ணம் என்று அந்த குடும்பத்தினர் நினைத்தனர். பெண் பூனையை ஆசையாக வளர்த்த குடும்பத்தினருக்கு, அவற்றின் 4 குட்டிகளை வளர்க்க விருப்பம் இல்லாமல் போனது.

இதையடுத்து, 4 குட்டிகளையும் எடுத்துக் கொண்டு குடும்பத்தினர். பக்கத்து வீட்டுக்கு சென் றனர். உங்களது ஆண் பூனையால் தான் எங்களது பூனை கர்ப்பம் அடைந்து 4 குட்டிகளை போட்டு உள்ளது. எனவே நீங்கள் தான் குட்டிகளை வளர்க்க வேண்டும் என்று கூறினர். இது தொடர்பாக 2 குடும்பத்தினர் இடையே கடும் தகராறு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் அடித்து தாக்கி கொள்ளும் நிலைக்கும் சென்றனர்.

அந்த சந்தர்ப்பத்தில் பெண் பூனையின் உரிமையாளர், ஆண் பூனை வளர்க்கும் குடும்பத்தி னரின் பிள்ளைகள் மீது திராவகம் (ஆசிட்) வீசி விடுவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் 2 குடும்பத்தினருக்கான வாக்குவாதம் முற்றியது. இதுபற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சேஷாத்திரிபுரம் போலீசார் விரைந்து வந்து 2 குடும்பத்தினரையும் சமாதான மாக செல்லும்படி கூறினார்கள். ஆனால் போலீசார் முன்பாகவே அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் ஒரு வழியாக 2 குடும்பத்தினரையும் போலீசார் சமரச தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்படி, ஆண் பூனை வீட்டு உரிமையாளரிடம் 2 குட்டிகளும், பெண் பூனை வீட்டு உரிமையாளரிடம் 2 குட்டிகளும் ஒப்படைக்கப்பட்டது. இதனால் பூனை விவகாரம் முடிவுக்கு வந்தது.

ஆனால் அதே நேரத்தில் தங்களது பிள்ளைகள் மீது திராவகம் வீசுவதாக கூறிய பெண் பூனை வளர்க்கும் குடும்பத்தினர் மீது கொலை மிரட்டல் புகார் அளிக்க முடிவு செய்துள்ள தாக மற்றொரு குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பெண் பூனை ஈன்ற 4 குட்டிகளுக்காக இரு குடும்பத்தினர் மோதிக்கொண்ட விசித்திர சம்பவம் பேசு பொருளாகியுள்ளது.