தேசிய செய்திகள்

குடிபோதையில் தகராறுவாலிபருக்கு கத்திக்குத்து

உப்பள்ளியில் குடிபோதையில் தகராறு ஏற்பட்டதில் வாலிபருக்கு கத்திக்குத்து போலீசில் சரண் அடைந்தார்

உப்பள்ளி

தாவார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா சன்னாபுரா கிராமத்தை சேர்ந்தவர் யுவராஜ் (வயது35). இவரது நண்பர் பரசுராம். நேற்றுமுன்தினம் இவர்கள் 2 பேரும் கல்கட்டகி மிசிரிகோட்டி பகுதியில் மது அருந்தி உள்ளனர்.அப்போது 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.

இதில் ஆத்திரமடைந்த யுவராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பரசுராமை குத்தி உள்ளார். இதில் ரத்த வள்ளத்தில் பரசுராம் சரிந்து விழுந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கல்கட்டகி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் யுவராஜ் கல்கட்டகி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT