விஜயவாடா,
கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து நேற்று முன்தினம் தன்பாத் நோக்கி விரைவு ரெயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. ரெயில், ஆந்திர மாநிலம் அன்னாவரம் ரெயில்நிலையம் அருகே சென்றபோது பி.1 பெட்டியில் பயணித்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து பெண் பயணச் சீட்டு பரிசோதனை ஊழியர்கள் அவருக்கு பாதுகாப்பான பிரசவம் நடைபெற உதவிகளை செய்தனர். கர்ப்பிணிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து ரெயிலை அடுத்ததாக வரவிருந்த எலமஞ்சிலி ரெயில் நிலையத்தில் சிறப்பு நிறுத்தமாக நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு அரசின் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தாயும், சேயும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.