தேசிய செய்திகள்

சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வுக்கு பிந்தைய செயல்பாடுகளுக்கு தனி இணையதளம் இன்று முதல் தொடக்கம்

சேவை இணையதளமாக விளங்கும் 'ஆன் மார்க்' போர்ட்டலில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பதாக சமீபத்தில் சர்ச்சை கிளம்பியது.

புதுடெல்லி,

சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின விடைத்தாள் மதிப்பீட்டு முறை இந்த ஆண்டு மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியது. இது தொடர்பாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு உள்ளது.

எனவே தேர்வு முடிவுகளுக்கு பிந்தைய நடைமுறைகளுக்காக புதிய இணையதளம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வரும் என சி.பி.எஸ்.இ. அறிவித்தது.

சி.பி.எஸ்.இ நிர்வாகம்

அதேநேரம் சி.பி.எஸ்.இ. சேவை இணையதளமாக விளங்கும் 'ஆன் மார்க்' போர்ட்டலில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பதாக சமீபத்தில் சர்ச்சை கிளம்பியது. இந்த பிரச்சினையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக சி.பி.எஸ்.இ. நிர்வாகமும் அறிவித்தது.

தற்போது இந்த பிரச்சினை சரி செய்யப்பட்டு விட்டதாக சி.பி.எஸ்.இ. நேற்று அறிவித்தது. சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்று கடந்த சில நாட்களாக இந்த பணிகளை மேற்கொண்டதாகவும், இதில் கண்டறியப்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சி.பி.எஸ்.இ. வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருந்தது.