தேசிய செய்திகள்

பேராசிரியருக்கு எதிராக பனாரஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தொடர் போராட்டம்

பாலியல் புகாரில் சிக்கிய பேராசிரியருக்கு எதிராக பனாரஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வாரணாசி,

உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை பேராசிரியர் எஸ்.கே.சவுபேக்கு எதிராக மாணவிகள் சிலர் கடந்த ஆண்டு பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். இதனால் அவர் கடந்த அக்டோபர் மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

பின்னர் அவர் கடந்த ஜூன் மாதம் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டாலும், வகுப்பு எடுக்க அவருக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த தடையும் நீக்கப்பட்டதால், கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல் அவர் பாடம் நடத்தி வருகிறார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் மாலையில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். கல்லூரிக்கு வெளியே நடந்து வரும் இந்த போராட்டம் இரவு முழுவதும் தொடர்ந்ததுடன், நேற்றும் நீடித்தது. இதில் பங்கேற்ற மாணவ-மாணவிகள், பாலியல் புகாரில் சிக்கிய அந்த பேராசிரியரை நீக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

SCROLL FOR NEXT