தேசிய செய்திகள்

உ.பி.வினோதம்; வீட்டின் அறையில் பள்ளம் தோண்டிய போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

ராகேஷ் யாதவ் வீட்டிற்கு சென்ற போலீசார் சந்தேகப்படும் படியான அறையில் பள்ளம் தோண்டினர்.

லக்னோ,

உத்திர பிரதேசத்தில் பூமிக்கு அடியில் பீப்பாய்களில் கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ் யாதவ் என்கிற மகாகால்.

இவரது சொத்துமதிப்பு மீது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு சந்தேகம் எழுந்தது. அவரது மூதாதையர் வீட்டில் பெரும் மதிப்பிலான பணம் இருக்கும் என போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் ராகேஷ் யாதவ் வீட்டில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி,உதவி போலீஸ் கமிஷனர் தலைமையில் தனிப்படைஅமைக்கப்பட்டது. போலீசார் ராகேஷ் யாதவ் வீட்டுக்கு செல்வதற்கு முன்பாக கிராமம் முழுவதும் முன்கூட்டியே மின் இணைப்பை துண்டித்தனர்.

ராகேஷ் யாதவ் வீட்டிற்கு சென்ற போலீசார் சந்தேகப்படும் படியான அறையில் பள்ளம் தோண்டினர்.அப்போது பூமிக்கு அடியில் 3 பீப்பாய்களில் கட்டுகட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்த போலீசார் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் பணத்தை ஒப்படைத்தனர். இது சம்பந்தமாக ராகேஷ் யாதவின் சகோதரர் கைது செய்யப்பட் டுள்ளார்.

குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ராகேஷ்யாதவின் பழத் தோட்டம் மற்றும் வி சாய நிலங்களில் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT