புதுடெல்லி,
டெல்லி மெட்ரோ ரெயிலில் வித்தியாசமான சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வரும் நிலையில், தற்போது பெண் ஒருவர் குளியல் உடை அணிந்தபடி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரலாகி வரும் அந்த வீடியோவில், பெண் ஒருவர் குளியல் உடை அணிந்து, தலையில் டவல் கட்டியபடி மெட்ரோ ரெயிலில் அமர்ந்திருக்கிறார். மேலும், தனது கண்களுக்குக் கீழே அழகு பராமரிப்புக்கான பேட்ச்களையும் ஒட்டியுள்ளார்.
மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தபடியே அவர் தனது சருமப் பராமரிப்பு வழக்கத்தை மேற்கொள்வது போன்ற காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “இது மெட்ரோ ரெயிலா? அல்லது அழகு நிலையமா?” என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.