பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு காட்டன் பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் நபர் ஒரு பசு மாட்டை வளர்த்து வருகிறார். அதனை சாலையோரம் அவர் கட்டி போட்டு இருந்தார். இந்த நிலையில், அந்த பசு மாட்டுடன் ஒரு நபர் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
அதாவது நள்ளிரவில் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் காட்டன் பேட்டைக்கு வருகிறார். பின்னர் சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, மக்கள் யாரும் வருகிறார்களா? என அவர் பார்க்கிறார். மக்கள் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட வாலிபர், பசு மாட்டுடன் தகாத உறவில் ஈடுபடுகிறார். அதன்பிறகு. மோட்டார் சைக்கிளை எடுத்துகொண்டு வாலிபர் செல்லும் காட்சிகள் கேமராவில் பதிவாகி உள்ளது.
இதுபற்றி காட்டன் பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோ காட்சிகளும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த காட்சிகளின் வாலிபரின் உருவம்,மோட்டார் சைக்கிளின் பதிவெண் நன்றாக பதிவாகி உள்ளது. இதையடுத்து, காட்டன் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.