தேசிய செய்திகள்

வறுமையை ஒழிக்க நிதி, டிஜிட்டல் பொருளாதார அணுகல் அவசியம் - நிர்மலா சீதாராமன்

2011 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் சுமார் 50 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளதாக உலக வங்கி அறிக்கை தெரிவிக்கிறது.

புது டெல்லி,

வறுமையை ஒழிக்க நிதி மற்றும் டிஜிட்டல் பொருளாதார அணுகல் அவசியம் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புக் காப்பீடு

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தனது லிங்க்டுஇன் சமூக வலைத்தள பக்கத்தில் 'வறுமைக்கு எதிரான போக்கை இந்தியா மாற்றியமைத்த தசாப்தம்' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் வறுமையை ஒழிக்க நிதி மற்றும் டிஜிட்டல் பொருளாதார அணுகல் அவசியம் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் அதில் கூறுகையில், "வறுமை என்பது வெறும் வருமானக் குறைபாடு மட்டுமல்ல. பாதுகாப்பான வீடு, குடிநீர், சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதி இல்லாத குடும்பங்கள், வருமானம் உயர்ந்தாலும் பாதிப்புக்குள்ளாகும் நிலையிலேயே உள்ளன. ஒரு எதிர்பாராத நோய், அந்தக் குடும்பத்தின் ஒட்டுமொத்த சேமிப்பையும் அழித்து, அவர்களை மீண்டும் வறுமைக்குத் தள்ளிவிடும். ஜல் ஜீவன் மிஷன் (குடிநீர்). ஆயுஷ்மான் பாரத் (மருத்துவம்), பிஎம் ஆவாஸ் யோஜனா (வீடு). உஜ்வாலா யோஜனா (சமையல் எரிவாயு) மற்றும் ஸ்வச் பாரத் (தூய்மை) போன்ற நலத்திட்டங்கள். இத்தகைய அதிர்ச்சிகளுக்கு எதிரான பாதுகாப்புக் காப்பீடாகச் செயல்படுகின்றன." என்று தெரிவித்தார்.

50 கோடி இந்தியர்கள் மீட்பு

மேலும் அவர், "2011 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் சுமார் 50 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளதாக உலக வங்கி அறிக்கை தெரிவிக்கிறது. வறுமையை முழுமையாக ஒழிக்கவும். வறுமையில் இருந்து மீண்டவர்கள் மீண்டும் அந்த நிலைக்குச் செல்லாமல் தடுக்கவும் நிதி, சந்தைகள் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான பரந்த அணுகல் மிகவும் முக்கியமானது.

இதற்காக 59 கோடிக்கும் அதிகமான ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. முத்ரா திட்டத்தின் கீழ் 60 கோடிக்கும் அதிகமான கடன் கணக்குகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் மூன்றில் இரண்டு பங்கு கடன்கள் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், பிஎம் ஸ்வநிதி மற்றும் பிஎம் விஸ்வகர்மா ஆகிய திட்டங்கள் தெருவோர வியாபாரிகள் மற்றும் பாரம்பரிய கைவினைஞர்களின் வாழ்வாதாரத்திற்குப் பக்கபலமாக உள்ளன." என்று குறிப்பிட்டுள்ளார்.

வளர்ச்சியடைந்த இந்தியா

தொடர்ந்து அவர், கல்வி நிறுவனங்களுக்கும் தொழில்துறைக்கும் இடையே வேலைவாய்ப்பு சார்ந்த ஊக்கத்தொகை கள் மற்றும் தொழில்பயிற்சிகள் மூலம் நெருக்கமான தொடர்பை அரசு உருவாக்கி வருகிறது. மேலும், உள்கட்ட மைப்பு முதலீடுகள் மூலம் நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் இணைக்கும் பணிகளும் நடைபெறுகின்றன.

சமூகத்தின் கடைக்கோடி மனிதனின் நலனை முன்னிறுத்தி, ஒவ்வொரு குடும்பத்தின் தேவைகளையும் பூர்த்தி செய் யும் வகையில் அரசு செயல்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் தொடர்ச்சியான கவனத்தால், கொள்கைகள் மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. 'விக்சித் பாரத்' (வளர்ச்சியடைந்த இந்தியா) இலக்கை அடைய, வளர்ச் சிக்கான வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்" என்றுள்ளார்.

SCROLL FOR NEXT