பீர் பாட்டில்களை அள்ளிச்சென்ற மது பிரியர்கள்! 
தேசிய செய்திகள்

ஆந்திராவில் மதுபானம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: பீர் பாட்டில்களை அள்ளிச்சென்ற மது பிரியர்கள்!

ஆந்திர மாநிலத்தில் பீர் பாட்டில்களை ஏற்றி சென்ற லாரி ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

அமராவதி,

ஆந்திர மாநிலம் ஏலூரு அருகே பீர் பாட்டில்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சாலையில் சிதறிய பாட்டில்களை பொதுமக்கள் போட்டி போட்டு அள்ளி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லாரி விபத்து

ஆந்திர மாநிலம் ஏலூரு பகுதியில் பீர் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று அதிவேகமாக வந்துகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அள்ளி சென்ற பொதுமக்கள்

லாரி கவிழ்ந்த சத்தம் கேட்டு அந்த பகுதி பொதுமக்களும், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் ஓடி வந்தனர். சாலையில் உடையாமல் சிதறிக்கிடந்த பீர் பாட்டில்களை போட்டி போட்டுக்கொண்டு அள்ள தொடங்கினர்.

போக்குவரத்து நெரிசல்

மது பிரியர்கள் ஒரே நேரத்தில் சாலையில் திரண்டு பீர் பாட்டில்களை அள்ளியதால், அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பீர் பாட்டில்களை அள்ளி சென்ற பொதுமக்களின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT