தேசிய செய்திகள்

11 ஆயிரம் சமூக வலைத்தள பதிவுகள் மீது நடவடிக்கை - தேர்தல் கமிஷன் தகவல்

5 மாநில தேர்தல் தேதியை கடந்த மார்ச் 15-ந் தேதி அறிவித்தது தேர்தல் கமிஷன்.

புதுடெல்லி,

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்களையொட்டி, சட்டவிரோதமான, திசைதிருப்பக்கூடிய மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட சமூக வலைத் தள பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தேர்தல் கமிஷன் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி, 5 மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மார்ச் 15-ந் தேதியில் இருந்து இதுவரை 11 ஆயிரம் சட்டவிரோத சமூக வலைத்தள பதிவுகள் மற்றும் இதர உள்டக்கங்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

அந்த பதிவுகளை நீக்குதல், வழக்குப்பதிவு செய்தல், விளக்கம் கோருதல், மறுப்பு தெரிவித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக கூறியுள்ளது.