தேசிய செய்திகள்

நடிகர் இம்ரான் கானை நாடு கடத்த வேண்டும்- கிரித் சோமையா வலியுறுத்தல்

கிராந்தி மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில் இந்தி நடிகர் இம்ரான் கான் கலந்து கொண்டார்.

மும்பை,

வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இம்ரான் கான் போராட்டத்தில் பங்கேற்றது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரை உடனடியாக நாடு கடத்த வேண்டும் என்று பா.ஜனதா முன்னாள் எம்.பி. கிரித் சோமையா வலியுறுத்தியுள்ளார்.

கிரித் சோமையா கேள்வி

கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாக மும்பை ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில் இந்தி நடிகர் இம்ரான் கான் கலந்து கொண்டார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட நடிகர் இம்ரான் கான் உள்ளிட்ட பலரை அதிரடியாக கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றிச்சென்றனர். இந்தநிலையில், நடிகர் இம்ரான் கான் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர் என்றும், அவர் இந்தியாவில் இதுபோன்ற அரசியல் போராட்டங்களில் ஈடுபட சட்டப்படி அனுமதி உள்ளதா? என்று பா.ஜனதா முன்னாள் எம்.பி. கிரித் சோமையா கேள்வி எழுப்பியுள்ளார்.

இம்ரான் கானை நாடு கடத்த வேண்டும்

இதுதொடர்பாக மும்பை போலீஸ் இணை கமிஷனர் மனோஜ் குமார் சர்மாவுக்கு அவர் அனுப்பியுள்ள புகார் கடிதத்தில், வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இம்ரான் கான் போராட்டத்தில் பங்கேற்றது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரை உடனடியாக நாடு கடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இம்ரான் கானின் பதிவு

இதற்கிடையே, போலீஸ் வாகனத்தில் இருந்தபடி சமூக வலைதளத்தில் பதிவிட்ட இம்ரான் கான், "நான் சும்மா ஒரு டிரைவ் செல்வதாக தெரிகிறது" என்று நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார். மேலும், போலீசார் தன்னை வாகனத்தில் ஏற்றும்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "எனக்கு எந்த கோரிக்கையும் இல்லை. நான் எந்த அமைப்பை சேர்ந்தவனும் இல்லை. நான் என்ன தவறு செய்தேன்? என்னை ஏன் இப்படி நடத்துகிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பிய வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT