கொச்சி,
சபரிமலை துவாரபாலகர் சிலைக்கு முலாம் பூச வழங்கப்பட்ட தங்கத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கில், நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத் துறை (ED) மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே சென்னையில் உள்ள நடிகர் ஜெயராமின் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, தற்போது அவர் கொச்சியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சபரிமலை தங்கத் திருட்டு வழக்கு தொடர்பான விசாரணை தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எதிர்வரும் நாட்களில் மேலும் பரபரப்பான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.