தேசிய செய்திகள்

திருப்பதி கோவிலில் தரிசனம் செய்த நடிகர்கள் நாகார்ஜுனா, மாதவன்

கோவில் நிர்வாகம் சார்பில் நடிகர்களுக்கு வேத ஆசீர்வாதத்துடன் தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இலவச தரிசனத்தில் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.

அதே போல், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். அந்த வகையில், நடிகர் நாகார்ஜுனா, அவரது மனைவி அமலா மற்றும் மகன் அகில் ஆகியோருடன் திருப்பதி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து நடிகர் மாதவனும் திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வழிபட்டார்.

தரிசனத்திற்கு பிறகு அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வேத ஆசீர்வாதத்துடன் தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த நடிகர்களை கண்ட ரசிகர்கள் ஆர்வத்துடன் புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.