தேசிய செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பின் 43வது மாடியில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்

கடன் தொல்லை காரணமாக சம்பவ் தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்துள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் 43வது மாடியில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியானா மாநிலம் மானேசர் பகுதியை சேர்ந்த இளைஞர் சம்பவ் (வயது 35). இவர் உத்தரபிரதேசத்தின் நொய்டாவில் உள்ள செக்டார் 94 சூப்பர் சோவா அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 43வது மாடியில் உள்ள ஒரு அறையில் நேற்று வாடகைக்கு தங்கியுள்ளார்.

தற்கொலை

இந்நிலையில், அந்த அறையில் தங்கி இருந்த சம்பவ் நேற்று மாலை 3 மணியளவில் திடீரென அடுக்குமாடி குடியிருப்பின் 43வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில், சம்பவ இடத்திலேயே சம்பவ் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

இந்த தற்கொலை குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று சம்பவ்வின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாக சம்பவ் தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்துள்ளது.

SCROLL FOR NEXT