புதுடெல்லி,
பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் வினெய் காதியார் முன்னதாக தாஜ்மஹால் இந்து கோவில் மீது கட்டப்பட்டது என கூறியது சர்ச்சையாகியது. இப்போது டெல்லியில் புகழ்பெற்ற ஜும்மா மசூதி ஜமுனா தேவி கோவிலாகும் என அவர் கூறிஉள்ளார்.
தாஜ்மஹால் மற்றும் செங்கோட்டையை கட்டிய முகலாய மன்னர் ஷாஜகானால் 17-ம் நூற்றாண்டை சேர்ந்த மசூதியும் கட்டப்பட்டது.
பா.ஜனதா தலைவர் வினெய் காதியார் பேசுகையில், டெல்லி முகலாயர்கள் ஆட்சியின் கீழ் வருவதற்கு முன்னதாக ஜும்மா மசூதி ஜமுனா தேவி கோவிலாக அறியப்பட்டது. முகலாயர்கள் ஆட்சியின் போது 6000 இடங்கள் இடித்து அழிக்கப்பட்டது. தாஜ்மஹாலை போன்று டெல்லி ஜும்மா மசூதியும் உண்மையில் ஜமுனா தேவி கோவிலாகும், என பேசிஉள்ளார். குஜராத் தேர்தல் நடைபெற உள்ளநிலையில் அயோத்தி விவகாரம் தொடர்பாக காரசாரமான விவாதம் நடைபெற்று வரும் நிலையில் பா.ஜனதா தலைவர் இத்தகைய கருத்தை தெரிவித்து உள்ளார்.