பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு எம்.ஜி. ரோடு லாவல்லி ரோடு பகுதியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலிக்கு சொந்தமான 'ஒன்8 கம் யூன்' என்ற ஓட்டல் அமைந்துள்ளது. இந்த ஓட்டலில் தீ பாதுகாப்பு விதிகள் சரியாக பின்பற்றப்படவில்லை என கூறி கடந்த ஆண்டு (2025) மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர்.
இந்த விவகாரத்தால் விராட் கோலிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் விராட் கோலி அந்த நிறுவனத்தில் இருந்து விலகியதாகவும், ஓட்டலில் இருந்து ஒன் என்ற பெயரை நீக்குமாறு கூறியதாகவும் தெரிகிறது. அதன்படி ஓட்டலில் இருந்து ஒன்: என்ற பெயர் நீக்கப்பட்டது.
அதன்பிறகு அந்த ஓட்டலின் வணிகம் கடுமையாக சரிந்தது. வாடிக்கையாளர் வருகை மற்றும் வருவாயில் ஏற்பட்ட சரிவு, அந்த நிறுவனத்தை நிதி நெருக்கடிக்கு தள்ளியது. இதன்காரணமாக வாடகை, பராமரிப்பு கட்டணங்களை செலுத்து வதை கடினமாக்கியதுடன், ஊழியர்களுக்கு சம்பளமும் கொடுக்க முடியாமல் போனது.
வாடகை நிலுவை தொகையை கொடுக்காததால் கட்டிடத்தின் உரிமையாளர், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் செலுத்த வேண்டிய அனைத்துத் தொகைகளும் செலுத்தப்படும் வரை அந்த வளாகத்தை மூடுமாறு கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, வாடகை பிரச்சினை, கட்டிட உரிமையாளரின் சட்ட நடவடிக்கை மற்றும் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட உரிமையாளர் ஒன்8 ஓட்டலை மூடி உள்ளார். இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.