தேசிய செய்திகள்

இடைத்தேர்தல் நடத்தக்கூடாது; தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு

அதிமுக எம்எல்ஏக்கள் பதவி விலகல் செய்து தவெகவில் இணைந்தது பற்றி தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைவது தொடர்பாக அதிமுக எம்.பி.இன்பதுரை தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில்,

அதிமுக எம்எல்ஏக்கள் பதவி விலகல் செய்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தக்கூடாது. சட்டமன்ற உறுப்பினர்களை இழுத்து தவெக குதிரை பேரம் செய்கிறது. ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த எம்.எல்.ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜினாமா செய்யும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். குதிரை பேரம் குற்றச்சாட்டில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.