தேசிய செய்திகள்

ஏர்இந்தியா விமானம் போபாலில் அவசரமாக தரையிறக்கம்

விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதால் அதில் இருந்த பயணிகள் உயிர் தப்பினர்.

மும்பை,

மும்பையில் இருந்து நேற்று முன் தினம் பிற்பகல் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. விமானத்தில் 175 பயணிகள் இருந்தனர். போபால் நெருங்கிய போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து பிற்பகல் 3.20 மணிக்கு விமானம் போபால் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறகப்பட்டது.

விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதால் அதில் இருந்த பயணிகள் உயிர் தப்பினர். இந்தநிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக போபாலில் இருந்து மும்பை வர இருந்த ஏர் இந்தியா விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் அதில் வர இருந்த 178 பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT