தேசிய செய்திகள்

காற்று மாசு: டெல்லியில் அலுவலக ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தல்

காற்று மாசை மட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

புதுடெல்லி,

டெல்லியில் காற்று மாசு கடுமையான பிரிவில் உள்ளது. மக்கள் சுவாசப் பிரச்சினைகளால் அவதிப்படுகிறார்கள். மக்களை காக்க அரசு பல்வேறு மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

வீட்டிலிருந்து பணியாற்ற..

அந்த வகையில், டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த கட்டுமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, அலுவலகங்களுக்கு 50% ஊழியர்கள் மட்டும் வருகை தர வேண்டும் என்றும், மற்ற ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கட்டுமானங்களுக்கு தடை

மேலும், கட்டுமானம், இடிப்புப் பணிகள், சாலை, மேம்பாலம், குழாய் பதிப்புப் பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ, ரயில்வே, மருத்துவமனைப் பணிகளுக்கு மட்டும் இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த உத்தரவுகள் வருகிற 5-ந்தேதி முதல் 20 வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT