மும்பை,
மராட்டிய முன்னாள் துணை முதல்-மந்திரி அஜித்பவார் கடந்த மாதம் 28-ந்தேதி புனே அருகே உள்ள பாராமதியில் விமான விபத்தில் உயிரிழந்தார். வி.எஸ்.ஆர். நிறுவனத்தின் குட்டி விமானத்தில் அவர் பயணித்தபோது இந்த விபத்து நடந்தது.
இந்த நிலையில் அந்த நிறுவனத்தின் விமானங்களை பாதுகாப்பு தணிக்கை நடத்த மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட பாதுகாப்பு தணிக்கையில், அந்த நிறுவனத்தின் விமானங்களில் பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டன.
இதையடுத்து மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்படி அந்த நிறுவனத்தின் வி.டி-வி.ஆர்.ஏ., வி.டி.-வி.ஆர்.எஸ், வி.டி-வி.ஆர்.வி., வி.டி.டி.ஆர்.ஐ. ஆகிய 4 விமானங்களை இயக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.