பாட்னா,
பீகார் மாநிலம், கிழக்கு சம்பாரன் மாவட்டத்தின் மோதிஹாரி உள்ள துர்கௌலியா மற்றும் ரகுநாத்பூர் பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை இரவு அங்கு உள்ள மக்கள் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். இதில் கலக்கப்பட்டிருந்த மெத்தனால் அல்லது தொழிற்சாலை ஸ்பிரிட் காரணமாக விஷத்தன்மை ஏற்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. இந்த நிலையில் கள்ளச்சாராயம் குடித்த சில மணி நேரத்திலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான வாந்தி, மயக்கம், தலைவலி மற்றும் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது.
உடல்நலம் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஏழு பேர் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தனர்.ஆனால் இதுவரை இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது நான்காக உயர்ந்துள்ளதாக கிழக்கு சம்பாரன் மாவட்ட ஆட்சியர் சௌரப் ஜோர்வால் தெரிவித்தார்.
இந்த சம்பவம் அறிந்த போலீசார் உடனடியாக தீவிர விசாரணையை தொடங்கினர். முதற்கட்டமாக கடமையில் கவனக்குறைவாக இருந்ததாக கூறி, துர்கௌலியா காவல் நிலைய பொறுப்பு அதிகாரி மற்றும் கிராம காவலர் ஆகியோர் உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கிராம காவலர் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் சௌரப் ஜோர்வால் தெரிவித்தனர்.
கள்ளச்சாராயம் விநியோகம் செய்ததாக கருதப்படும் முக்கிய குற்றவாளி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும்.மேலும் மாவட்ட காவல்துறை மற்றும் மதுவிலக்கு அதிரடிப்படை குழுவினர் அந்த பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
பீகாரில் 2016 முதல் மதுவிலக்கு அமலில் இருந்தாலும், கள்ளச்சாராய விற்பனை மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்து நிகழ்ந்து வருவதாகவும். மேலும் இந்த சம்பவம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.