சந்திரபாபு நாயுடு 
தேசிய செய்திகள்

தமிழக முதலீடுகளை ஆந்திரா பக்கம் திருப்புகிறேனா? சந்திரபாபு நாயுடு பதில்

தமிழக முதலீடுகளை ஆந்திரா பக்கம் திருப்புகிறீர்களா? என்ற கேள்விக்கு சந்திரபாபு நாயுடு அதிரடியாக பதில் அளித்துள்ளார்.

சென்னை,

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 2 நாட்கள் நடைபெற்ற 31-வது சிஐஐ கூட் டாண்மை உச்சி மாநாட்டில், ரூ.9 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 109 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன்மூலம் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில், அந்த மாநில முதல்- மந்திரி சந்திர பாபு நாயுடுவிடம் நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அப்போது அவர், கடந்த 2 வாரங்களாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மிகப்பெரிய வாகன நிறுவனங்களும், தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களது விரிவாக்கத் திட்டங்களுக்காக ஆந்திராவுக்கு வந்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின் றன. ஒரு மாநிலத்தில் தொழில் நிறுவனங்களையும், முதலீடுகளையும் தக்க வைத்துக்கொள்வதில் அரசியல் தலைமைத்துவமும், அரசியல் உறுதிப்பாடும் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன என்று நீங்கள் நினைக்கிறீர்களா? மேலும், தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டங்களை ஈர்ப்பதில் தமிழ்நாட்டைவிட ஆந்திரப் பிரதேசம் சிறப்பாகச் செயல்படுவது ஏன்? என்றார்.

விமர்சனம்

அதற்கு சந்திரபாபு நாயுடு பதில் அளித்ததாவது:-

எப்போதும் நீங்கள் பரபரப்பான விஷயங்களை விரும்புகிறீர்கள். ஆனால், நான் முடிவுகளை விரும்புகிறேன். இங்கே ஒரு முரண்பாடு இருக்கிறது. அனைத்து மாநிலங்களும் ஒன்றுக்கொன்று போட்டியிடுகின்றன. ஆனால், முதலீட்டாளர்களுக்கு அவர்களுக்கென சொந்த விருப்பங்கள் உள்ளன. ஆனால் முதலீடுகளை எவ்வாறு ஈர்ப்பது என்பது எனக்கு தெரியும். மொத்தம் நடைபெற்ற 31 சிஐஐ கூட்டாண்மை உச்சி மாநாடுகளில் 8 மாநாடுகளை நான் நடத்தியிருக்கிறேன். 1995-ம் ஆண்டில் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது குறித்து மக்கள் அச்சப்பட்டனர். 'நீங்கள் பணக்காரர்களுக்கு ஆதரவானவர் என்று முத்திரை குத்தப்படுவீர்கள்' என்று அஞ்சினர்.விசாகப்பட்டினத்தில் ஒரு ஏக்கர் நிலத்தை ஒரு ரூபாய்க்கு வழங்கியதால் இவ்வளவு விமர்சனம் வருகிறது என்று நீங்கள் அனைவரும் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.

அதிக சலுகைகள்

ஆனால், அந்தச் சலுகையை நீங்கள் வழங்கவில்லை என்றால், அந்தத் தொழில் நிறுவனமே இங்கு வராது. தற்போது ஆரம்ப கட்டத்தில் நாங்கள் அதிக சலுகைகளை வழங்குகிறோம். அதன்பிறகு, சலுகைகளைப் படிப்படியாகக் குறைத்து வருகிறோம். ஏனென்றால், தொழில் சூழல் உருவாகி வருகிறது. அதன்பிறகு, அவர்கள் தானாகவே இங்கு வரத் தொடங்குவார்கள். இதைத்தான் நாம் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு யுக்தி இருக்கிறது. இந்த அரசு அந்த யுக்திகளின்படியே செயல்படும்.

எனவே, நாங்கள் எந்தவிதமான முறையற்ற வழியிலும் முதலீடுகளை ஈர்க்க வில்லை. முதலீட்டாளர்களுக்கு 28 மாநிலங்களும் உள்ளன. தொழில் நிறுவனங் களுக்கு எந்த மாநிலம் அதிக நட்பானதாகவும், சாதகமானதாகவும் இருக்கி றதோ, அந்த மாநிலத்தையே அவர்கள் தேர்வு செய்வார்கள். அவர்கள் அங்கு வருவார்கள்.இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.

SCROLL FOR NEXT