தேசிய செய்திகள்

நோயாளியை ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ், லாரி மீது மோதி விபத்து - 6 பேர் பலி

இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தேஜ்பூர்,

அசாம் மாநிலம் சோனித்பூர் மாவட்டத்தில் நோயாளி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை ஏற்றிக்கொண்டு மருத்துவமனை நோக்கி ஆம்புலன்ஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், ஆம்புலன்சில் பயணம் செய்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, போக்குவரத்தை அதிகாரிகள் சீர் செய்தனர். மேலும், விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.