தேசிய செய்திகள்

குஜராத்: சர்வதேச எல்லையை நேரில் பார்வையிட்ட அமித்ஷா

குஜராத் பாகிஸ்தானை ஒட்டி அமைந்துள்ள மாநிலமாகும்.

காந்தி நகர்,

குஜராத் பாகிஸ்தானை ஒட்டி அமைந்துள்ள மாநிலமாகும். பாகிஸ்தானுடன் 500 கிலோ மீட்டர் நீளத்திற்கு குஜராத் எல்லையை பகிர்கிறது.

அமித்ஷா

இந்நிலையில், உள்துறை மந்திரி அமித்ஷா இன்று குஜராத் சென்றுள்ளார். குஜராத்தின் குட்ச் மாவட்டம் சென்ற பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லையை நேரில் பார்வையிட்டார். எல்லையில் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், எல்லைப்பாதுகாப்புப்படை வீரர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

அமித்ஷா திரிபுரா, மேற்கு வங்காளம் சென்று வங்காளதேச எல்லைகளையும் நேரில் பார்வையிட உள்ளார்.