தேசிய செய்திகள்

இன்று முதல் நாடு முழுவதும் அமுல் பால் விலை ரூ.2 உயர்வு

உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாக இந்த விலை உயர்வு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமுல் நிறுவனம் கூறியுள்ளது.

புதுடெல்லி,

குஜராத் அரசின் கூட்டுறவு நிறுவனத்தின் அமுல் பால் நாடு முழுவதும் விற்பனையாகிறது. இந்த நிறுவனம் பால் விலையை உயர்த்தி நடவடிக்கை எடுத்து உள்ளது.

அதன்படி நாடு முழுவதும் அமுல் பால் இன்று முதல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.2 அதிகரிக்கிறது. உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாக இந்த விலை உயர்வு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமுல் நிறுவனம் கூறியுள்ளது.

அதாவது, பால் உற்பத்தி மற்றும் செயல்பாட்டுக்கான ஒட்டுமொத்த செலவு அதிகரித்ததன் காரணமாகவும், குறிப்பாக தீவனம், எரிபொருள் உள்ளிட்டவற்றின் விலையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படடு உள்ளதாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

எனினும் இந்த விலை உயர்வு லிட்டர் ஒன்றுக்கு வெறும் 2.5 முதல் 3.5 சத வீதம்தான் எனவும், இது சராசரி உணவு விலை உயர்வுக்கும் குறைவானது என்றும் அமுல் நிறுவனம் கூறியுள்ளது.