தேசிய செய்திகள்

அந்தமான் தீவுகளில் இலேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 4.3 ஆக பதிவு

அந்தமான் தீவுகளில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.3 ஆக பதிவானது.

புதுடெல்லி,

அந்தமான் தீவுகளில் நள்ளிரவு இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.3 ஆக பதிவானது. நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை.