தேசிய செய்திகள்

உத்திரகாண்ட் மாநிலத்தில் லேசான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு

உத்திரகாண்ட் மாநிலத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

டேராடூன்,

உத்திரகாண்ட் மாநிலத்தின் தெஹ்ரி கார்வால் எனும் இடத்தில் இன்று மாலை 6:18 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவாகி உள்ளது.

இந்த தகவலை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்பு உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.