புதுடெல்லி,
காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிரிக்கட்சி தலைவருமான ராகுல் காந்தி உத்திர பிரதேசத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
ஒரு மாபெரும் பொருளாதார புயல் இப்போது நெருங்கி கொண்டிருக்கிறது. நம் நாட்டை தாக்க போகிறது. அதை யாராலும் தடுக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு பொருளாதார நெருக்கடி வரவிருக்கிறது. நம் வாழ்நாளில் நீங்களோ நானோ கண்டிராத ஒன்று. வரவிருக்கும் பொருளாதார அதிர்ச்சி அதானி, அம்பானி அல்லது மோடியை தாக்காது. மாறாக இளைஞர்கள், தொழிலாளர்கள், சிறு வணிகர்களை தாக்கும்.
பொருளாதார புயல் பல ஆண்டுகளாகக் காணாத வகையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மிகக் கடினமான ஒரு காலகட்டம் நம்மை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. பொதுமக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறார்; ஆனால் அவர் உலக நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார் என்றார்.