தேசிய செய்திகள்

வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை... ரெயில்வே கேட்டை உடைத்து அட்டகாசம்

சம்பவத்தன்று இரவு ஹசிடே பகுதியில் உள்ள ரெயில்வே கேட் மூடப்பட்டிருந்தது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகாவில் உள்ள ஹசிடே கிராமம் வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இதனால், இப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டும் அடிக்கடி காணப்படுகிறது.

ரெயில்வே கேட்

இந்நிலையில், சம்பவத்தன்று இரவு ஹசிடே பகுதியில் உள்ள ரெயில்வே கேட் மூடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தது. அப்போது, வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று அந்த தண்டவாளத்தை கடக்க முயன்றது. ஆனால், ரெயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால், காட்டு யானை அதனை முட்டி உடைத்து தள்ளியதுடன் அங்கிருந்து முன்னோக்கி நகர்ந்து சென்றது.

அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவம் பெரிய விபத்தை தவிர்த்தாலும், அந்த காட்டு யானை கேட்டை உடைத்து செல்லும் காட்சியை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறை ஊழியர்கள் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.

SCROLL FOR NEXT