தேசிய செய்திகள்

மகன்களால் கொலை செய்யப்பட்ட முதியவருக்கு மருமகளுடன் கள்ளத்தொடர்பு..? - போலீஸ் விசாரணை

முனிகிருஷ்ணப்பாவுக்கு பல கோடி ரூபாய்க்கு சொத்துகள் உள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு இந்திராநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தோபனஹள் ளியை சேர்ந்தவர் முனிகிருஷ்ணப்பா (வயது 70). இவரது மகன்கள் மோகன்குமார், கஜேந்திரா. முனிகிருஷ்ணப்பா பி.எம்.டி.சி. பஸ் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டார். அவருக்கு பல கோடி ரூபாய்க்கு சொத்துகள் உள்ளது.

கடந்த 16-ந் தேதி ஆக்கி மட்டையால் தாக்கி முனி கிருஷ்ணப்பா தனது மகன்களால் கொலை செய்யப்பட்டு இருந்தார். சொத்து பிரச்சினை காரணமாக முனிகிருஷ்ணப்பாவை, அவரது மகன் கள் கொலை செய்திருப்பதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக இந்திராநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன்குமாரை கைது செய்தார்கள். தலைமறைவான கஜேந்திராவை போலீசார் தேடிவருகிறார்கள்.

இதற்கிடையே, சொத்து பிரச்சினையால் முனிகிருஷ்ணப்பா கொலையாகவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது முனிகிருஷ்ணப்பா தனது மரும களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகவும், இதுபற்றி மோகன்குமா ருக்கு தெரியவந்ததும், தந்தையுடன் சண்டை போட்டதாகவும் முனிகிருஷ்ணப்பாவின் மனைவி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

தனது மகன்களை கணவர்தான் கொலை செய்ய திட்டமிட்டு கத்தி, உருட்டுக்கட்டையை வைத்திருந்ததாகவும், சொத்துக்காக இந்த கொலை நடக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் முனிகிருஷ்ணப்பா சொத்துக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது கள்ளத்தொடர்பு விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து இந்திராநகர் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.