தேசிய செய்திகள்

ஆந்திரா: கிருஷ்ணா நதியின் குறுக்கே 3.38 கி.மீ. நீளத்தில் ரெயில்வே பாலம் அமைக்க திட்டம்

ரெயில்வே பாலம் கட்டும் திட்டத்திற்கு சுமார் ரூ.2,047.4 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அமராவதி,

ஆந்திர பிரதேச மாநிலம் விஜயவாடாவில், கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே 3.38 கி.மீ. நீளத்தில் ரெயில்வே பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக விஜயவாடா கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி நுஸ்ரத் மந்த்ரூப்கர் தெரிவித்துள்ளார்.

ரெயில்வே பாலம்

ஆந்திர பிரதேசத்தையும், தெலுங்கானாவையும் இணைக்கும் 56.53 கி.மீ. ரெயில் திட்டத்தின் ஒரு பகுதியாக, விஜயவாடாவில் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே 3.38 கி.மீ நீளமுள்ள புதிய ரெயில்வே பாலம் அமைப்பதற்கான திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மொத்த செலவு ரூ.2,047.4 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்தும் பணிகள்

பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம்(EPC) முறையில் இதற்கான பணிகள் செயல்படுத்தப்படும் என்றும் நுஸ்ரத் மந்த்ரூப்கர் தெரிவித்துள்ளார். ஆந்திர பிரதேசத்தில் இத்திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நில ஒருங்கிணைப்பு செயல்முறை மூலம் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT