ஐதராபாத்,
வங்கக்கடலில் உருவான முரசு புயல் ஆந்திராவில் இன்று அதிகாலை ஓங்கோலுக்கு தெற்கே கரையை கடந்தது. இதன்காரணமாக ஆந்திராவில் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசியது. பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. இதனால் மின் வினியோகம் தடைப்பட்டுள்ளது.
கடலோர பகுதிகளை கடக்கும்போது மணிக்கு குறைந்தபட்சம் 100 முதல் 110 கி.மீ வேகத்திலும் அதிகபட்சம் 120 கி.மீ வேகத்திலும் காற்று வீசியது. அதிகாலை 4 மணிக்கு கரையை தொட்ட புயல் வலுப்பெற்று முழுமையாக காலை 9 மணிக்கு கரையை கடந்தது.
புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திர மாநில பகுதிகளில் பலத்த காற்றும், மழையும் தொடர்ந்து பெய்து வருகிறது. கடலோர பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. நெல்லூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்றும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படலாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
புயல் பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில், முன்னதாகவே பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.ரெயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
சில விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.தாழ்வான பகுதிகளில் வசித்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
கடந்த வாரம் ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளை அர்னாப் (Arnab) புயல் தாக்கியது. இந்தப் புயலில் குறைந்தது 5 பேர் உயிரிழந்ததுடன், விவசாய நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கி நாசமாகின.
தற்போது இரண்டாவது புயலும் தாக்கியுள்ளதால், ஆந்திரப் பிரதேசத்தின் பல பகுதிகளில் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். மீட்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
வங்கக்கடலில் உருவான முராசு புயலின் செயற்கைக்கோள் புகைப்படத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா (NASA) வெளியிட்டுள்ளது.
இந்தப் புகைப்படத்தில் வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள முராசு புயலின் மேகக் கூட்டங்கள் மற்றும் அதன் சுழற்சி அமைப்பு தெளிவாகக் காணப்படுகின்றன.
ஆந்திரப் பிரதேசத்தை நோக்கி நகர்ந்த இந்தப் புயல், பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் அருகே கரையைக் கடந்தது.
புயல் காரணமாக ஆந்திரப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. புயலின் நகர்வு மற்றும் மழைப்பொழிவைக் கண்காணிக்க வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.