தேசிய செய்திகள்

13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த ஆந்திர அரசு தடை

13 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை செய்வது குறித்து தனது அரசு முடிவெடுக்கும் என்று ஆந்திர முதல்- மந்திரி தெரிவித்துள்ளார்.

அமராவதி,

13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக வலைதளங்களை பயன்படுத்த அடுத்த 90 நாட்களுக்குள் தடை செய்யப்படும் என்று ஆந்திர முதல் - மந்திரி என். சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

இன்று சட்டசபையில் பேசிய முதல் - மந்திரி, 13 முதல் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்தத் தடையை நீட்டிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து தீவிரமாக விவாதித்து வருவதாகவும்,"நிச்சயமாக, 13 வயதுக்குட்பட்டவர்கள் 90 நாட்களுக்குள் சமூக வலைதளங்களை பயன்படுத்த முடியாது என்பதையும் நாங்கள் உறுதி செய்வோம்" என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

13 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை செய்வது குறித்து தனது அரசு முடிவெடுக்கும் என்று ஆந்திர முதல்- மந்திரி தெரிவித்துள்ளார்.