தேசிய செய்திகள்

மத்திய கிழக்குப் போரில் சிக்கி இதுவரை 6 இந்தியர்கள் உயிரிழப்பு, ஒருவர் மாயம்

மத்திய கிழக்கில் நடந்து வரும் போர் தீவிரமடைந்து வருகிறது.

புதுடெல்லி,

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் தூதரங்கள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. 23-வது நாளாக மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நீடிக்கிறது.

இந்தநிலையில், மத்திய கிழக்குப் போரில் சிக்கி இதுவரை 6 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவர் மாயமாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மாயமானவரைத் தேடும் பணியை தீவிரப்படுத்தவும், இறந்தவர்களின் உடல்களை விரைவாகத் தாயகம் கொண்டு வரவும் நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT