தேசிய செய்திகள்

மேற்கு வங்காள முதல்-மந்திரி சுவேந்து அதிகாரி உதவியாளர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

சுவேந்து அதிகாரி உதவியாளர் கொலை வழக்கில் 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான 2 நாட்களில், பா.ஜனதா தலைவர் சுவேந்து அதிகாரியின் உதவியாளராக இருந்த சந்திரநாத் ரத் சுட்டுக்கொல்லப்பட்டார். சுவேந்து அதிகாரி முதல்-மந்திரி ஆன பிறகு, இவ்வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பல்லியா மாவட்டத்தை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி ஞானேந்திர பிரதாப்சிங் தேடப்பட்டு வந்தார். அவர் மற்றொரு வழக்கில் பல்லியா கோர்ட்டில் சரண் அடைந்தார். மாவ் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். அவரை சந்திரநாத்ரத் கொலை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. கைது செய்து, கொல்கத்தாவுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறது.

SCROLL FOR NEXT