தேசிய செய்திகள்

சோனியா காந்தி சுயசரிதையை வேறு பதிப்பகம் 10-ந் தேதி வெளியிடுகிறது

சோனியாகாந்தி சுயசரிதையை வேறு பதிப்பகம் 10-ந் தேதி வெளியிடுகிறது.

புதுடெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி எழுதிய 'பிலாங்கிங்: எ ஜர்னி ஆப் லவ்' என்ற சுயசரிதையை நவம்பர் 10-ந் தேதி பென்குயின் ரேண்டம் ஹவுஸ் என்ற சர்வதேச பதிப்பகம் வெளியிடுகிறது. ஆனால், இந்தியாவில் அப்புத்தகத்தை வெளியிட மாட்டோம் என்று அதன் இந்திய பிரிவான பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா அறிவித்தது.

புத்தகத்தில், பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். குறித்த பகுதிகளை நீக்குமாறு பென்குயின் பதிப்பகம் கூறியதை சோனியாகாந்தி ஏற்க மறுத்ததால், பதிப்பகம் பின்வாங்கி விட்டதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக மத்திய அரசை காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில், சோனியா காந்தியின் சுயசரிதையை இந்தியாவில் அதே நவம்பர் 10-ந் தேதி வெளியிடுவதாக ஹார்பர்கொலின்ஸ் இந்தியா என்ற மற்றொரு பதிப்பகம் நேற்று அறிவித்தது. எனவே, சர்வதேச அளவில் பென்குயின் ரேண்டம் ஹவுஸ் வெளியிடும் அதே நாளில், இந்தியாவில் ஹார்பர்கொலின்ஸ் இந்தியா வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT