புதுடெல்லி,
டெல்லியின் சப்ஜி மண்டி பகுதியில் உள்ள பீர் பாபா மஜார் அருகே ஜ்வாலா நகரில் இன்று காலை 10.09 மணி அளவில் இந்த கட்டிடம் திடீரென மளமளவென இடிந்து விழுந்துள்ளது. இது குறித்து விவேக் விஹார் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்தனர்.
விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஷஹ்தாரா துணை காவல் ஆணையர் ஆர்.பி. மீனா, “இடிபாடுகளில் 7 பேர் சிக்கி இருந்தனர். ஆறு பேரும் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக ஹெட்கேவார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், குஷ்பு என்ற 3 வயது சிறுமியும், பிந்து என்ற 30 வயது நபரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் தேவாம்ஷ் (27), விகேஷ் (35), ஆகாஷ் (25), டிம்பா (22) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சுரேந்தர் சிங் என்பவருக்குச் சொந்தமான இந்த கட்டிடத்தில் வாடகைக்கு வசித்து வந்துள்ளனர். தொடர் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.” என தெரிவித்தார்.
டெல்லியின் சாவ்ரி பஜாரில் பல மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து ஏழு பேர் உயிரிழந்த சில நாட்களுக்குப் பிறகு இந்தச் சம்பவம் இன்று நிகழ்ந்துள்ளது.