புதுடெல்லி,
மத்திய கல்வி மந்திரியாக பிரகலாத் ஜோஷி நியமிக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-"மத்திய அமைச்சரவையில் கல்வி மந்திரியாக நியமிக்க பலர் இருந்தும், பாலியல் குற்றவாளிகளை ஆதரிப்பவர் என குற்றச்சாட்டு எழுந்துள்ள ஒருவரை பிரதமர் மோடி தேர்வு செய்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. இது கல்வித்துறைக்கும், மாணவர்களுக்கும் அவமானம். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் சமூக வலைத்தளமான 'எக்ஸ்' பதிவில், "பாலியல் குற்றவாளிகளை ஆதரிப்பவரைவிட அருவருப்பானவர் வேறு யாரும் இருக்க முடியாது. கோடிக்கணக்கான மாணவிகள் படிக்கும் கல்வி அமைப்புக்கு இத்தகைய நபரை அமைச்சராக நியமித்திருப்பதை இந்திய பெண்கள் ஏற்க மாட்டார்கள்" என்று பதிவிட்டார். இதற்கிடையே, மக்களவையில் தேர்வுக் கேள்வித்தாள் கசிவு தடுப்பு மசோதா மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் இதே குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதையடுத்து அவை யில் அமளி ஏற்பட்டது. மேலும், பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற் றவர்களை விடுதலை செய்தது தொடர்பாக பிரகலாத் ஜோஷி அளித்ததாக கூறப்படும் பழைய வீடியோ ஒன்றையும் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.