புதுடெல்லி,
மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கோவையின் இருகூர் – போத்தனூர் (10.77 கி.மீ) ரெயில்பாதையை இருவழியாக்கும் திட்டத்திற்கு ரெயில்வே அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த முக்கிய திட்டத்திற்கு விரைந்து அனுமதி வழங்கிய பிரதமர் மோடி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறேன்.
மேலும், இன்றைய தினம் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை பாராளுமன்ற அலுவலகத்தில் நேரில் சந்தித்து, தமிழக மக்கள் சார்பாக என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டேன்.என தெரிவித்துள்ளார்.