தேசிய செய்திகள்

அரசியலில் நுழைந்த சிபிஐ முன்னாள் இயக்குநர் நாகேஸ்வரராவ் - கட்சி தலைவராக பொறுப்பேற்பு...!

2018ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை நாகேஸ்வரராவ் சிபிஐ அமைப்பின் இயக்குநராக செயல்பட்டார்.

லக்னோ,

சிபிஐ முன்னாள் இயக்குநர் நாகேஸ்வரராவ் அரசியல் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

சிபிஐ முன்னாள் இயக்குநர் நாகேஷ்வரராவ். 1986ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான நாகேஸ்வரராவ் காவல்துறையில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். பின்னர் 2016ம் ஆண்டு சிபிஐ அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். இதன் பின்னர், 2018ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை நாகேஸ்வரராவ் சிபிஐ அமைப்பின் இயக்குநராக செயல்பட்டார். இதனை தொடர்ந்து அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

அரசியலில் நுழைந்த நாகேஷ்வரராவ்

இந்நிலையில், நாகேஸ்வரராவ் தற்போது அரசியலில் நுழைந்துள்ளார். அவர் சர்வஜன் சனாதன கட்சி என்ற கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் சர்வஜன் சனாதன கட்சியின் தலைவராக நாகேஸ்வரராவ் பொறுப்பேற்றுக்கொண்டார்.

SCROLL FOR NEXT