இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிப் பதில்லை என்றும் எதிர்காலத்திலும் இத்தகைய இறக்குமதிகளுக்கு அனுமதி வழங்கப்படாது எனவும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் கோயல் உறுதியளித்தார். டெல்லியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களி டையே அவர் உரையாற்றினார். அப்போது அவர், இந்தியா இதுவரை எந்தவொரு மரபணு மாற்றப்பட்டபொருட்க ளையும் இறக்குமதி செய்ய அனுமதித்ததில்லை. இது மிகவும் உணர்வுப்பூர்வ மான விஷயம் என்பதால், எதிர்காலத்திலும் இத்தகைய பொருட்களை இறக்கு மதி செய்ய அனுமதி வழங்கப்படாது" என்றார்.
மேலும் அவர், "பால் பண்ணை துறை இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானது. எந்தவொரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திலும் இந்தத் துறைக்கு இந்தியா இது வரை வரிச் சலுகைகளை வழங்கியதில்லை. வெளிநாடுகளில் பால் பொருட்கள் தயாரிக்கும்போது கன்றுக்குட்டி இறைச்சி அல்லது ரென்னெட் பயன்படுத்தப்படு கிறது. இந்தியாவின் மத உணர்வுகளைப் பாதிக்காத வகையில், இத்தகைய பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவது தடுக்கப்பட்டு, கடுமையான சான்றிதழ் நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
இதுவரை இறுதி செய்துள்ள வர்த்தக ஒப்பந்தங்களில், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நலன்களில் எந்தவித சமரச மும் செய்துகொள்ளவில்லை. ஜவுளி, மருந்து, விவசாயப் பொருட்கள் மற்றும் ஆபரணங்கள் போன்ற துறைகளில் இந்தியாவிற்கு முன்னுரிமை அடிப்படையி லான சந்தை வாய்ப்புகளைப் பெற அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் வழங்கும் புதிய வாய்ப்பு களை மாணவர்கள் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்" என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.