மராட்டிய துணை மந்திரியாக இருந்த அஜித்பவார் கடந்த ஜனவரி மாதம் நடந்த விமான விபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது மனைவி சுனேத்ரா பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், மாநில துணை முதல்-மந்திரி யாகவும் பொறுப்பேற்றார்.இந்தநிலையில், தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) தலைவர் சரத்பவார் உடல்நலக் குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, சுனேத்ரா பவார் அணியை சேர்ந்த பிரபுல் படேல், பார்த் பவார் உள்ளிட்ட தலைவர்கள் அவரை நேரில் சென்று சந்தித்தனர்.இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் இரு அணிகளும் மீண்டும் இணையப்போ வதாக இந்த மாத தொடக்கத்தில் இருந்து தகவல்கள் பரவி வந்தன.
இந்தநிலையில் சரத்பவார் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் பிரவீன் குந்தே பாட்டீல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- வறட்சி, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் அரசு பணியா ளர் தேர்வாணைய தேர்வு முறைகேடுகள் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவே, கட்சி இணைப்பு குறித்த வதந்தி கள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன.சரத்பவார் தலைமையிலான எங்கள் கட்சி எந்த கட்சியுடனும் இணையாது. இணைய விரும்புபவர்கள் எங்கள் கட்சியில் வந்து சேரவேண்டும் என்பதே எங்க ளின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக இதுகுறித்து பேசிய அக்கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, "அஜித்பவாரின் மறைவுக்கு பிறகு கட்சி இணைப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டன. எதிர்தரப்பிலிருந்து எந்த தகவலும் வரவில்லை" என்று தெரிவித் திருந்தார்.