திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை தினம் மற்றும் திருவிழா காலங்களில் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 62 ஆயிரத்து 811 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 19 ஆயிரத்து 499 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.4 கோடியே 20 லட் சம் கிடைத்தது.
வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 12 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பினர். தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட 'டைம் ஸ்லாட் டோக்கன்கள் இல்லாமல் இலவச தரிசனத்தில் சென்று பக்தர்கள் 6 மணி காத்திருந்து சாமி தரிசனம் செய்து விட்டு கோவிலில் இருந்து வெளியே வந்தனர்.