தேசிய செய்திகள்

அரியானா: 3 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி

இதற்காக தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினரும், தீயணைப்பு துறை மற்றும் ஆம்புலன்ஸ் சேவையும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அம்பாலா

அரியானாவில் 3 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியானார்கள்.

அரியானாவின் அம்பாலா நகரில் துல்கோட் கிராமத்தில் 3 அடுக்குமாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தபோது அது, திடீரென்று இடிந்து விழுந்துள்ளது.

இந்த சம்பவத்தில் 15-க்கும் மேற்பட்டோர் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்து போலீசார், அரசு நிர்வாகத்தினர் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்றனர்.

6 பேர் பலி

இதன் தொடர்ச்சியாக, 13 பேர் ஒன்றன் பின் ஒன்றாக மீட்கப்பட்டனர். இந்த நிலையில், இன்று காலை ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. இதனால், மொத்த பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் அனைவருடைய உடல்களும் மீட்கப்பட்டு உள்ளன.

இதில் பாதிக்கப்பட்டோர் பலர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவர். தொடர்ந்து தேடுதல் பணி நடந்து வருகிறது. இதற்காக தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினரும், தீயணைப்பு துறையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT