தேசிய செய்திகள்

துப்பாக்கி முனையில் தேசிய வங்கியில் நகை, பணம் கொள்ளை; 5 இளைஞர்கள் அட்டூழியம்

இந்த தகவல் அறிந்து, நகர போலீஸ் சூப்பிரெண்டு கந்தேல்வால் சம்பவ பகுதிக்கு சென்று, விசாரணையை தொடங்கினார்.

ஜாம்ஷெட்பூர்

5 இளைஞர்கள் துப்பாக்கி முனையில் தேசிய வங்கியில் நகை, பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூர் நகரில் கோல்முரி கிளையில் தேசிய வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், நகை, பணம் கொள்ளை உள்ளிட்டடைவ இன்று கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. 5 இளைஞர்கள் வங்கிக்குள் திடீரென உள்ளே நுழைந்து துப்பாக்கியை உயர்த்தி காட்டினர்.

சி.சி.டி.வி. காட்சிகள்

அவர்கள், வங்கியில் கொள்ளையடிக்கும் நோக்கில் வந்துள்ளனர். இதனால், வங்கி ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அதிர்ந்து போனார்கள். துப்பாக்கி முனையில் அவர்கள் 5 பேரும் பணம் மற்றும் நகை ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர். அவற்றின் மதிப்பு ரூ.43 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

அவர்கள் அனைவரும் 2 மோட்டார் சைக்கிள்களில் தப்பினர். இந்த தகவல் அறிந்து, நகர போலீஸ் சூப்பிரெண்டு கந்தேல்வால் சம்பவ பகுதிக்கு சென்று, விசாரணையை தொடங்கினார். சி.சி.டி.வி. காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு உள்ளன. சம்பவத்தின்போது, அவர்கள் ரெயின்கோட் அணிந்திருந்தனர். அவர்களை தேடி வருகிறோம் என்று கூறினார்.

SCROLL FOR NEXT