அமராவதி,
அர்னாப் புயலால் ஆந்திராவுக்கு ரூ. 4,600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அர்னாப் புயலாக மாறியது. தீவிர புயலாக மாறிய அர்னாப் புயல் நேற்று அதிகாலை ஆந்திராவின் காகிநாடா மற்றும் புதுச்சேரியின் ஏனாம் கடற்கரை பகுதிகளில் பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே யானன் பகுதியில் கரையை கடந்தது.
புயல் கரையை கடந்தபோது புதுச்சேரி, ஆந்திரா, ஒடிசாவில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக, ஆந்திராவின் விசாகப்பட்டினம், அனகாப்பள்ளி, காக்கிநாடா உள்பட பல்வேறு பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், அர்னாப் புயலால் ஆந்திராவுக்கு 4,600 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக அம்மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். புயலால் பாதிக்கப்பட்ட அம்பேத்கர் கொனசீமா மாவட்டம் கச்சகாயல போரா கிராமத்தை இன்று நேரில் பார்வையிட்ட முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், புயலால் ரூ. 4,600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. புயலால் சேதமடைந்த தென்னை மற்றும் பாமாயில் மரத்திற்கு தலா ரூ. 1,500 இழப்பீடு வழங்கப்படும். புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தற்காலிக நிவாரணமாக 25 கிலோ அரசி, அத்தியாவசிய பொருட்கள், ரொக்கப்பணம் வழங்கப்படும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பை சரிசெய்ய பயிர் காப்பீடு மூலம் ஈடுகட்டப்படும். விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும்’ என்றார்.