தேசிய செய்திகள்

அருணாசல பிரதேசம்: நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி; ஒருவர் மாயம்

போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதுடன் தண்ணீர் விநியோகமும் துண்டிக்கப்பட்டது.

திஸ்பூர்

அருணாசல பிரதேசத்தில் நிலச்சரிவு ஏற்பட்டத்தில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளனர்.

அருணாசல பிரதேசத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், திபாங் பள்ளத்தாக்கு மற்றும் அப்பர் சுபான்சிரி மாவட்டத்தில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

நிலச்சரிவு

இந்நிலையில், அப்பர் சுபான்சிரி மாவட்டத்தில் நசோ கிராமத்தில் சினாலிடா பெல்ட் பகுதியில் நேற்று பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தொழிலாளர்கள் பலர் சிக்கி கொண்டனர்.

அவர்களில் 3 பேர் பலியாகி உள்ளனர். ஒருவர் காயமடைந்து உள்ளார். ஒருவரை காணவில்லை. அவர் நிலச்சரிவில் சிக்கியிருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. அவரை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.

மீட்பு பணி

இதனால், சாலை வசதியும் துண்டிக்கப்பட்டது. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதுடன் தண்ணீர் விநியோகமும் துண்டிக்கப்பட்டது.

தொடர் மழை மற்றும் சமச்சீரற்ற நிலப்பகுதி என மீட்பு பணி மேற்கொள்வதிலும் அதிக சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.